தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு

தூத்துக்குடியில் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

Update: 2022-11-19 18:45 GMT

தூத்துக்குடியில் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

தொழில்பூங்கா

தொழில் நகரமான தூத்துக்குடியில் துறைமுகம், விமானம் சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளதால் பல்வேறு தொழிற்சாலைகள் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதனை தொடர்ந்து தூத்துக்குடியில் நேற்று தமிழக தொழில் பூங்கா மேலாண்மை இயக்குனர் பல்லவி பல்தேவ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மற்றும் அதிகாரிகள் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வேலைவாய்ப்பு

பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் டைடல் பூங்கா அமைப்பதற்காக திருச்செந்தூர் சாலையில் உள்ள இடம் மற்றும் மதுரை புறவழிச்சாலை சாலையில் உள்ள இடங்கள், மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அருகில் மற்றும் எதிர்புறம் உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலை சர்வதேச பர்னிச்சர் பூங்கா இணைப்பு சாலையையும் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வு முடிந்தபின் தொழில் பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு தமிழக அரசிடம் அறிக்கை வழங்கப்படும். மேலும் தூத்துக்குடியில் அமைக்கப்படும் தொழில் பூங்காவால் தூத்துக்குடியின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்