பந்தலூர் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்ட தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு
பந்தலூர் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்ட தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு
பந்தலூர்
பந்தலூர் அருகே அத்திகுன்னா தனியார் தேயிலைதோட்ட குடியிருப்பு உள்ளது. இங்கு எராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அந்தப்பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று பயங்கர சத்தத்துடன் பள்ளம் விழுந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து மாவட்டகலெக்டர் அருணா உத்தரவுபடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு கனிமவியல்துறை துணை இயக்குனர் ரமேஸ் ஆய்வு நடத்தினார். நேற்று கூடலூர் ஆர்.டி.ஓ. முகமதுகுதரத்துல்லா தலைமையில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிசெயற்பொறியாளர் பூபாலன், சுரங்கம் மற்றும் புவியியல் துறை அலுவலர்ச ரவணன், நீர்வளம் ஆதாரத்துறை உதவிசெயற்பொறியாளர் சதீஸ்குமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது தேயிலை தோட்டத்தில் பள்ளம் விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு அறிக்கை அந்தந்த துறை ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும். அதன்பிறகு பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின் போது பந்தலூர் தாசில்தார் கிருஸ்ணமூர்த்தி, நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பிரான்சீஸ், கிராம நிர்வாக அலுவலர் மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.