ஆரணி நகரில் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

ஆரணியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 120 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-05-25 10:39 GMT

ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி மேற்பார்வையிலும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலும் களப்பணியாளர்கள் ஆரணி நகரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 65 கடைகளில் சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் 120 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.8 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்ட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட கடைகளில் இனி பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்