சத்துணவு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு
சத்துணவு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு
கிணத்துக்கடவு
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம், கிணத்துக்கடவு ஒன்றிய பகுதியில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என 62 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இங்குள்ள சத்துணவு மையங்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலக்கண்ணன், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதில் 25 சத்துணவு மையங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. மேலும் 8 புதிய கட்டிடங்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருவது தெரியவந்தது. இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.