பழுதான மின்சாதனத்தை அதிகாரிகள் ஆய்வு

நெல்லை கருப்பந்துறையில் பழுதான மின்சாதனத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-05-04 20:01 GMT

நெல்லை டவுன் பிரிவில் மாற்று வழியில் மின்சாரம் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் கருப்பந்துறை அருகே உள்ள வளைய தரச்சுற்று (ஆர்.எம்.யு.) மின்சாதன எந்திரம் பழுதானது. இதனை உடனே சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி உத்தரவிட்டார். அதன்படி நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி, மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவுகள் கையாளப்படுத்துதல் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு, உதவி செயற்பொறியாளர் ராஜகோபால், உதவி மின் பொறியாளர் சாந்தி உள்ளிட்டவர்கள் அந்த பழுதான மின்சாதனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அவர்கள் விரைவில் பழுதை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்