சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு
சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு
நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18 பள்ளிகள் இயங்கி வருகிறது. மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களால் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை சீரமைக்கும் பணியை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. இதையடுத்து நாகப்பட்டினம் காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி, பால்பண்ணைச்சேரி நகராட்சி நடுநிலைப்பள்ளி, சாமந்தான்பேட்டை உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று சேதடைந்த பள்ளி கட்டிடங்களை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.