கரூர் மாவட்டம், நஞ்சைபுகழூரில் ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்தகடையில் குடும்ப அட்டைதார்களுக்கு மத்திய தொகுப்பில் இருந்து வினியோகம் செய்யப்படும் அரிசியின் தரத்தை இந்தியா உணவுக் கழகத்தின் பொதுமேலாளர் சிங் ஆய்வு செய்தார். மேலும் குடும்ப அட்டை தாரர்களிடம் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது பொதுவினியோகத்திட்ட துணைப் பதிவாளர் ராஜசேகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கரூர் மண்டல மேலாளர் நிர்மலாபிரியதர்ஷிணி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.