அரசு உதவி பெறும் மாணவர் இல்லங்களில் அதிகாரி ஆய்வு

திருவையாறு ஒன்றியத்தில் அரசு உதவி பெறும் மாணவர் இல்லங்களில் அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2023-04-06 19:16 GMT

திருவையாறு:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்பேரில் திருவையாறை அடுத்த கடுவெளியில் இயங்கிவரும் வெங்கடேஸ்வரா ஆதரவற்றோர் மாணவர்கள், முதியோர் இல்லத்தில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ரேணுகாதேவி ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு பார்த்து தரத்தை ஆய்வுசெய்தார். அதை தொடர்ந்து தங்கியிருக்கும் மாணவ, மாணவிகளின் விவரங்களை கேட்டறிந்தார். மாணவர்கள் தங்கியிருக்கும் கட்டிடங்களையும், காற்றோட்ட வசதிகளையும், படுக்கை வசதிகளையும் பார்வையிட்டு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றை ஆய்வு செய்தார். அதைதொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு இல்லத்திற்கு வந்த மாணவ, மாணவிகளிடம் இன்றைய தேர்வு எப்படி எழுதினீர்கள் என்றும் வினாத்தாள்கள் எவ்வாறு இருந்தது என்றும் மாணவர்களிடம் கலந்துரையாடினார். இந்த ஆய்வின் போது தாசில்தார் பார்த்தசாரதி மற்றும் வெங்கடேஸ்வரா மாணவர் இல்ல நிர்வாகிகள் உடனிருந்தனர். அதை தொடர்ந்து திருவையாறு ஒன்றியத்தில் உள்ள அரசு உதவிபெறும் மாணவர் இல்லங்களில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ரேணுகாதேவி ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்