வேளாண் திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

ஆலங்குளம் வட்டாரத்தில் வேளாண் திட்டப்பணிகளை ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-13 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்ந்த திட்டப்பணிகளை ஸ்டாமின் இயக்குனர் சங்கரலிங்கம் நேரில் கள ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், ஊத்துமலை கிராமத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளைநிலமாக்கும் திட்டத்தில் உலகநாதன், ஜெகநாதன், பொன்னுத்துரை, சுப்பிரமணியன் ஆகியோர் தரிசு நிலத்தை சீர்திருத்தி உழவு செய்து, உளுந்து பயிர் சாகுபடி செய்திருந்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மேலமருதப்பபுரத்தில் விவசாயிகளிடம் பி.எம்.கிசான், ஈ.கே.ஒய்.சி. பணியின் முன்னேற்றத்தினை ஆய்வு செய்தார். தொடர்ந்து கீழக்கலங்கல் கிராமத்தில் பொன்மூர்த்தி என்பவருக்கு தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட மரக்கன்றுகளையும், செல்வராஜின் விதைபண்ணைகளைவும் ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். மேலக்கலங்கல் பகுதியில் சுந்தரபாண்டியன் என்பவரின் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தில் மர எண்ணெய் வித்துக்கள் திட்டத்தில் வேம்பு மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளதை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர், வேளாண்மை துணை இயக்குனர் (திட்டங்கள்) நல்லமுத்து ராஜா, ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுருநாதன், துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர்கள் திருப்பதி, மாரியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் மணிகண்டன், சுமன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்டேன்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்