வேளாண் செயல் விளக்க திடல்களை அதிகாரி ஆய்வு
எஸ்.புதூர் பகுதியில் வேளாண் செயல் விளக்க திடல்களை அதிகாரி ஆய்வு செய்தார்.
எஸ்.புதூர்,
வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் எஸ்.புதூர் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு வகைகள் செயல்விளக்க திடல்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இதில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட ஆலோசகர் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். நுண்ணீர் பாசன திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் முசுண்டப்பட்டி, செட்டிகுறிச்சி ஆகிய கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தில் ராகி பயிர் செயல்விளக்க திடல்களை ஆய்வு நடத்தி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் அம்சவேணி உள்பட வேளாண் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தென்னையில் ஊட்டச்சத்து உர நிர்வாகத்தின் கீழ் தென்னை விவசாயிகளுக்கு தக்கை பூண்டு இனக்கவர்ச்சி பொறி, மெட்டாரைசியம் போன்ற இடுபொருட்களை இலவசமாக வழங்கினர்.