விழுப்புரம் ரெயில் நிலையத்தில் அதிகாரி ஆய்வு
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் அதிகாரி ஆய்வு செய்தாா்.
தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தனி சிறப்பு ரெயிலில் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு நேற்று வருகை தந்தார். தொடர்ந்து ரெயில்நிலைய பகுதியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். சிக்னல்கள் சரியாக பராமரிக்கப்படுகிறதா, ரெயில் நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அதிகாரிகளிடம் ரெயில்வே தண்டவாளங்கள், சிக்னல் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா?, நடைமேடைகள் தூய்மையான முறையில் வைக்கப்பட்டுள்ளதா? என்றும் அவர் கேட்டறிந்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.