நாட்டுப்படகு உறுதி தன்மை குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

நாட்டுப்படகு உறுதி தன்மை குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-06-10 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி காந்திநகர் மாரியம்மன் கோவில், கிழக்குத் தெரு, முருகானந்தபுரம் காலனி, 90 வீட்டு சுனாமி காலனி ஆகிய பகுதியில் உள்ள மீனவர்களுக்கு சொந்தமான 530 நாட்டுபடகுகள் மீன்பிடி தொழிலுக்கு ஏற்ற வகையில் உறுதித் தன்மையுடன் உள்ளதா என்பது குறித்து ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் உதவி இயக்குனர் கோபிநாத், ஆய்வாளர் ரபீக்ராஜா மற்றும் ஷகிலாபானு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 330 படகுகளுக்கு உடனடியாக மீன் பிடிப்பதற்கான லைசன்ஸ் வழங்கப்பட்டது. மீதி உள்ள 200 படகுகளை மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு ஏற்றவாறு சீரமைத்து பழுது நீக்கி கொடுத்ததும், 15 நாட்களுக்குள் லைசன்ஸ் வழங்கப்படும் எனவும், படகுகளை சீரமைக்காத மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

தொடர்ந்து மீனவர்கள் சார்பாக மீன் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசை படகுகளுக்கு தேவையான டீசலை மானியத்துடன் கூடிய டீசல் வழங்குவதற்கு வசதியாக திருப்பாலைக்குடியில் டீசல் பல்க் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்வதாக கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்