அதிகாரிகள் ஆய்வு
செங்கோட்டையில் நீர் நில வள திட்டம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
செங்கோட்டை:
நீர்வள நிலவள திட்டத்தில் தென்காசி மாவட்டத்தில் செயல்படும் பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து முனைவர் கிருஷ்ணன் தலைமையில் ஜூடிஸ் டி செல்வா, பொறியாளர்கள் தங்கம், சந்திரசேகரன் உள்ளிட்ட குழுவினர் செங்கோட்டை மற்றும் இலத்தூர் பகுதிக்கு வந்தனர். அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடினர். பின்னர் இந்த திட்டத்தின் பயன்பாடு பற்றியும், விவசாயிகள் தங்களுடைய வேளாண்மையில் எவ்வாறு தொழில்நுட்ப விசயங்களை கையாளுகிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தனர்.
தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் ஆலோசனையின் பேரில் வேளாண்மை துணை இயக்குனர் (பொறுப்பு) உதயகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) கனகம்மாள் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த குழுவினரை செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் வரவேற்று, இந்த வட்டாரத்தில் நடைபெற்று வரும் பணிகள் பற்றி விளக்கி கூறினார். முன்னோடி விவசாயிகள் சுப்பையா, சங்கரசுப்பிரமணியம், முத்துசிவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் குமார் செய்திருந்தார்.