காரியாபட்டி,
காரியாபட்டி தாலுகாவில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு மற்றும் பரிசோதனை முகாம் கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இந்த முகாம் நாளை வரை நடைபெறுகிறது. இம்முகாமில் காரியாபட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிவது மற்றும் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முகாமினை தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மேலிட பார்வையாளர்கள் டாக்டர்கள் லில்லி, ஸ்ரீலேகா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தொழுநோய் கூடுதல் இயக்குனர் டாக்டர் அமுதா, தொழுநோய் விருதுநகர், மதுரை இணை இயக்குனர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆரோக்கிய ரூபன் ராஜ், மாவட்ட தொழுநோய் கட்டுபாட்டு அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.