ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் ஆலோசனை

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து தென்காசியில் இருமாநில அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

Update: 2022-06-09 14:48 GMT

தென்காசி:

தமிழகம் மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடி மற்றும் எல்லைப்பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு, உணவுப்பொருள் மற்றும் பொது வினியோக திட்ட பொருட்கள் கடத்தலை தடுப்பது குறித்த ஒருங்கிணைந்த கூட்டம் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா ஆகியோர் தலைமை தாங்கினர். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை நெல்லை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.

கேரள மாநிலம் சார்பில் கொல்லம் மாவட்டம் புனலூர் தாலுகா உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி பைசல், கொட்டாரக்கரா தாலுகா உணவுப்பொருள் வழங்கல் அதிகாரி ஜான் தாமஸ், தென்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம், தென்காசி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ், புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் மற்றும் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்காக அதிக போலீசாரை ஈடுபடுத்த வேண்டும். சந்தேகநபர்கள், செல்போன் எண் மற்றும் வாகனங்கள் குறித்த விவரத்தை தெரியப்படுத்த வேண்டும். தமிழக-கேரள அதிகாரிகள் ஒருங்கிணைந்து ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்களின் விவரங்களை சேகரித்து கண்காணித்து கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்