பள்ளி கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

திருக்கோவிலூரில் பள்ளி கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு

Update: 2022-06-24 17:40 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சொந்தமான வாகனங்களை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், செந்தூரவேல் ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் உள்ளிட்ட குழுவினர் வாகனங்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்தனர். அப்போது பாதுகாப்பு மற்றும் பல்வேறு நிலைகளில் குறைபாடுகள் இருப்பதாக கூறி 12 வாகனங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தியதோடு, குறிப்பிட்ட வாகனங்களை இயக்க அனுமதி மறுத்து உத்தரவிட்டனர். தொடர்ந்து டிரைவர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்தும், விபத்து இல்லாமல் வாகனங்களை ஓட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை ஒவ்வொரு டிரைவர்களும் உதவியாளர்களும் உறுதி ஏற்க வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் அறிவுரை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்