மக்கள் குறைதீர் கூட்டத்தில் குறட்டை விட்டு தூங்கிய அதிகாரி - பொதுமக்கள் அதிர்ச்சி..!

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், குறட்டை விட்டு தூங்கிய அதிகாரியால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

Update: 2023-04-18 03:05 GMT

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை, குறைகள் மனுக்களை பெற்றனர்.

இந்தநிலையில், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், குறட்டை விட்டு தூங்கிய அதிகாரியால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்காக, பல்வேறு கோரிக்கைகள் மற்றும் புகார்களோடு மாவட்டம் முழுவதுமிருந்து மக்கள் வந்திருந்தனர். ஆனால், கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலரும் செல்போன்களை பயன்படுத்திக் கொண்டும், தூங்கி வழிந்தபடியும் இருந்தனர். குறிப்பாக, அதிலும் ஒரு அதிகாரி குறட்டை விட்டு தூங்கி வழிந்ததால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

Full View


Tags:    

மேலும் செய்திகள்