கல்வராயன்மலையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு

கல்வராயன்மலையில் வளர்ச்சி திட்டப்பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2022-06-28 16:51 GMT

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் குண்டியாநத்தம் ஊராட்சியில் ரூ.18 லட்சம் செலவில் குடிநீர் கிணறுகள் அமைக்கும் பணி, பசுமை வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வளர்ச்சி திட்ட பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட இயக்குனர் மணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், பொறியாளர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து இன்னாடு ஊராட்சியில் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள சுகாதார வளாகத்தையும் மாவட்ட திட்ட இயக்குனர் மணி நேரில் பார்வையிட்டார். அப்போது கல்வராயன்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், உதவி பொறியாளர் அருண்ராஜா, ராஜ்குமார், பணி மேற்பார்வையாளர் சக்திவேல் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்