வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு

பாபநாசம் வட்டார குடோனில் வட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-06-10 19:57 GMT

பாபநாசம்;

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான வட்டார குடோனில் பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் ஆய்வு செய்தாா். அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, ஆயில் ஆகிய பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.மேலும் அரிசியின் தரம் குறித்து பரிசோதனை செய்தார். ஆய்வின் போது பாபநாசம் வட்டார குடோன் தர கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராமச்சந்திரன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் அஜித்குமார் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்