விதை பண்ணைகளில் வேளாண்மை துறை இயக்குனர் ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதி விதை பண்ணைகளில் வேளாண்மை துறை இயக்குனர் ஆய்வு செய்தாா்.

Update: 2022-12-14 18:38 GMT

திருத்துறைப்பூண்டி;

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள அரசு விதைப்பண்ணைகளில் திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார். திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள நெடும்பலம், தீவாம்பாள்பட்டினம், மற்றும் கீராந்தி, அரசு விதை பண்ணைகளில் திருவாரூர் வேளாண் இணை இயக்குனர் ஆசீர் கனகராஜ் ஆய்வு மேற்கொண்டார். நெடும்பலம் அரசு பண்ணையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மாப்பிள்ளைசம்பா, தூய மல்லி போன்ற பாரம்பரிய நெல் ரகங்களின் வளர்ச்சி தன்மை, மகசூல், இனதூய்மை பற்றி கேட்டறிந்தார். மேலும் விதை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் உளுந்து விதைகளின் தரம், முளைப்பு திறன் ஆகியவற்றை சோதித்தார். ஆய்வின் போது பண்ணை மேலாளர் செந்தில்குமார் இருந்தார். இதைப்போல திவாம்பாள்பட்டினம் அரசு விதை பண்ணையிலும் ஆய்வு நடந்தது. அங்கு சமீபத்தில் மழையால் சாய்ந்து கிடந்த மாப்பிள்ளை சம்பா பாரம்பரிய நெற் பயிரை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பண்ணையில் நீர்ப்பாசன முறைகள் பற்றி கேட்டறிந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்