மனுக்கள் குறித்து மாநில தகவல் உரிமை ஆணையர் ஆய்வு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்து மாநில தகவல் உரிமை ஆணையர் ஆய்வு செய்தார்.

Update: 2022-07-29 18:14 GMT


திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தகவல் உரிமை ஆணையர் முத்துராஜ் தலைமை தாங்கினார். தகவல் அறியும் உரிமை ஆணையம் உதவி பிரிவு அலுவலர் சபாநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.அப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய காலத்தில் தீர்வு காண வேண்டும். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், கனிமம் மற்றும் சுரங்கம், நாகை, வேதாரண்யம் நகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 32 மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்