உழவர் சந்தையில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு

கும்பகோணம் உழவர் சந்தையில் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2023-01-19 21:16 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் உழவர் சந்தையை தஞ்சை வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்) வித்யா, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது நாட்டு காய்கறிகள் விற்பனை செய்யும் விவசாயிகள் மற்றும் மலை காய்கறிகள் விற்பனை செய்யும் மகளிர் சுய உதவிக்குழுவினரின் கடைகளை பார்வையிட்டு காய்கறிகளின் வரத்தை அதிகப்படுத்த அறிவுறுத்தினார். தொடர்ந்து குளிர்சாதன அமைப்பு மற்றும் கழிவறை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அப்போது மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க விவசாயிகளை கேட்டுக்கொண்டார். மேலும் உழவர் சந்தையில் பராமரிக்கும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மகாலிங்கம், வேளாண்மை அலுவலர்கள் தாரா, ஜெய்ஜீபால், வேளாண்மை உதவி அலுவலர்கள் ரவிச்சந்திரன், கணேசன், கவிதா ஆகியோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்