நீடாமங்கலம் உழவர் சந்தையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு

நீடாமங்கலம் உழவர் சந்தையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-06-30 10:49 GMT

நீடாமங்கலம் உழவர் சந்தையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

உழவர் சந்தை

திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை) லட்சுமிகாந்தன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி கடந்த ஒரு வார காலமாக உழவர் சந்தை விழிப்புணர்வு முகாம் ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக உழவர்சந்தை செயல்பாடுகள் மற்றும் அதை மேம்படுத்துவது குறித்தும், நீடாமங்கலம் உழவர் சந்தையில் உள்ள கடைகளை விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும் தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து உதவி இயக்குனர் கூறுகையில், 'நீடாமங்கலம் பகுதியில் பயிரிடப்படும் காய்கறி பயிர்களான மரவள்ளி, கத்திரி, வெண்டை, மிளகாய் மற்றும் கொடிவகை காய்கறிகளை கூடுதல் பரப்பில் பயிரிடச்செய்ய வேண்டும்.

பயன் அடையலாம்

நீடாமங்கலம் அருகே உள்ள நரசிங்கமங்கலம், ஆதனூர், புள்ளவராயன்குடிகாடு, எடமேலையூர், எடகீழையூர், வடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை நீடாமங்கலம் உழவர் சந்தையில் விற்பதன் மூலம் விவசாயிகள் பயன் அடையலாம். நீடாமங்கலம் உழவர் சந்தையில் கடைகள் தேவைப்படுவோர் நீடாமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனரிடம் பரிந்துரை கடிதம் பெற வேண்டும்.

விவசாயிகள் காய்கறிகளை மன்னார்குடி உழவர் சந்தைக்கு எளிதாக எடுத்துச் செல்வதற்கு அரசு பஸ்களை எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் செல்விதேவி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பாலசுந்தரம், கவியரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்