எட்டயபுரத்தில்சார்-பதிவாளர் அலுவலகத்தைபா.ஜனதா கட்சியினர் முற்றுகை
எட்டயபுரத்தில்சார்-பதிவாளர் அலுவலகத்தை பா.ஜனதா கட்சியினர் முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் தாலுகா நாவலக்கம்பட்டியில் ஒரு தனியார் நிறுவனம் போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளதை கண்டித்தும், போலி பத்திரப்பதிவை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று மாலையில் பா.ஜ.க.வினர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆன்மீக பிரிவு செயலாளர் ராம்கி தலைமையில் எட்டயபுரம் சார்-பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி சார்-பதிவாளரிடம் மனு அளித்தனர். இதில் எட்டயபுரம் ஒன்றிய செயலாளர் ஹரிஹரசுதன், மாவட்ட விவசாய சங்க செயலாளர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மனுவை பெற்றுக் கொண்ட சார்- பதிவாளர், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.