ஒடிசா மாநில வாலிபர் கைது

ஒடிசா மாநில வாலிபர் கைது

Update: 2023-02-10 19:44 GMT


அலங்காநல்லூர் கோவிலூரை சேர்ந்தவர் ராம்பாபு (வயது 51). இவர் ஊருக்கு செல்வதற்காக குரு தியேட்டர் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனை அருகில் இருந்து வாலிபர் பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார். உடனே ராம்பாபு சத்தம் போட அருகில் இருந்தவர்கள் விரட்டி சென்று அந்த வாலிபரை பிடித்து கரிமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்த போது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரங்கா பதான்(35) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்