நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

சாத்தனூரில் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Update: 2022-05-30 13:53 GMT

தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் ஊராட்சியில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு புளியங்குளம் பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் ஓடை பகுதியை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.

கோர்ட்டு உத்தரவுபடி நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை துணைத் தாசில்தார் செந்தில்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தலைமையில் அளவீடு செய்து வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பொக்லைன் மூலம் 33 சென்ட் அளவில் நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்