விவசாயிகளுக்கான கண்டுணர்வு சுற்றுலா

சின்னசேலம் அருகே விவசாயிகளுக்கான கண்டுணர்வு சுற்றுலா

Update: 2023-07-02 18:45 GMT

சின்னசேலம்

வேளாண்மை துறை மற்றும் நெட்டாபிம் இரிகேஷன் சென்னை மண்டலம் சார்பில் சின்னசேலம் ஒன்றியம், மூங்கில்பாடி கிராமத்தில் இயற்கை விவசாயம் சொட்டு நீர் பாசன முறையில் நெல் பயிர் சாகுபடி மேற்கொண்டுள்ள சாகுபடி வயலை மற்ற விவசாயிகள் பார்வையிட்டு பயனடையும் வகையில் நெல் சொட்டுநீர் பாசனம் குறித்த கண்டுணர்வு சுற்றுலா இயற்கை முறையில் நெல் சொட்டுநீர் பாசனம் அமைத்த இயற்கை விவசாயி கவிதா தோட்டத்தில் நடைபெற்றது. இதில் சின்னசேலம் வட்டாரத்தை சேர்ந்த சுமார் 30 விவசாயிகள் கலந்து கொண்டு நெல் சொட்டு நீர் பாசனம் அமைத்த வயலை பார்வையிட்டு தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நெட்டாபிம் உழவியல் துறை மாநில மேலாளர் ரவிகுமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இயற்கை விவசாயி கவிதா நெல் சொட்டுநீர் பாசனம் குறித்த தனது அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்ந்து கொண்டார். உழவியல் அலுவலர் சிவசங்கர் நன்றி கூறினார். இதில் சின்னசேலம் வட்டார வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்