தங்கத்தேர் இழுத்து ஓ.பன்னீர்செல்வம் வழிபாடு
பழனி முருகன் கோவிலில், தங்கத்தேர் இழுந்து ஓ.பன்னீர்செல்வம் வழிபட்டார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அப்போது ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். பின்னர் கோவில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தங்கத்தேர் இழுத்து அவர் வழிபாடு செய்தார். இதனை பார்த்த ஏராளமான பக்தர்கள், ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அதன்பிறகு மலைக்கோவிலில் இருந்து ரோப்கார் மூலம் அடிவாரம் வந்த அவர், அங்கிருந்து காரில் ஏறி தேனிக்கு புறப்பட்டு சென்றார். இந்த வழிபாட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் உள்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தங்கத்தேர் இழுத்து வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.