ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புசெயலாளர் அசோக் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முரளிதாஸ் வரவேற்றார் .அ.ம.மு.க. அமைப்புச்செயலாளர் கிங்ஸ்லி ஜெரால்டு, மாநில ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் மோகன்குமார், தொகுதி செயலாளர் வீரராசு, மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் நாகராஜ்,அ.ம.மு.க. நகர செயலாளர் லிங்கேஷ், ஊராட்சி மன்ற தலைவர் நெல்சன்யாசர் பிரபு, மாவட்ட மாணவர் செயலாளர் வெற்றிசெல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.