ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆலோசனை கூட்டம்

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் ஆலோசனை கூட்டம் சிவங்கையில் நடைபெற்றது.

Update: 2023-10-18 19:45 GMT


சிவகங்கை மாவட்டம் ஓ.பன்னீர்செல்வம் பிரிவின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவகங்கையில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சிவகங்கை நகர் செயலாளர் கே.வி.சேகர் வரவேற்று பேசினார். கொள்கை பரப்பு செயலாளர் மருதுஅழகுராஜ் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பாலா, மாவட்ட அவைத்தலைவர் பழனியப்பன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் சித்திரைசாமி, தொகுதி செயலாளர் நாகராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் மாரி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கணேஷ்பாபு, சிவகங்கை ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், முத்துப்பாண்டி, சேகர், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் துரைராஜ், அர்ச்சுனன், செல்லப்பாண்டியன், நாட்டரசன்கோட்டை பேரூர் செயலாளர் முத்துப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாமன்னர் மருதுபாண்டியர்கள் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவிற்கு வருகை தரும் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பூத்கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்