ஓ.பன்னீர்செல்வம் அணி-அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஓ.பன்னீர்செல்வம் அணி-அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-01 18:42 GMT

கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் குறித்து துரித விசாரணைக்கு நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசை கண்டித்தும், இந்த வழக்கு விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை பெற்றுத்தர முதல்-அமைச்சரை வலியுறுத்தியும் அரியலூரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும், அ.ம.மு.க.வினரும் இணைந்து கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அ.ம.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ஆப்டிகல் ரவி தலைமை தாங்கினார். ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் விஜய் பார்த்திபன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டு, கோடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்