பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் - ஓ.பன்னீர்செல்வம்

பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்-அமைச்சர் பதவியை நான் ஏற்றுக்கொண்டேன் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-16 14:58 GMT

சென்னை,

சென்னை அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

அதிமுகவை வழிநடத்துகின்ற தலைமை பொறுப்பு உள்ளது என தொண்டர்களுக்கு அடிப்படை உரிமையாக எம்.ஜி.ஆர். ஆல் வழங்கப்பட்டது. தொண்டர்களால் தேர்தல் முறையில் பொதுச்செயலாளர் என்ற பதவியை உருவாக்குவதனால் இந்த அடிப்படை சட்டவிதி கொண்டுவரப்பட்டது.

பொதுக்குழுவின் தீர்மானங்கள் மூலமாக பல்வேறு விதிகள் உருவாக்குவதும் திருத்தங்கள் கொண்டுவருவரவும் முடியும். ஆனால், பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற சட்ட விதியை மட்டும் எந்த சூழ்நிலையிலும் மாற்றக்கூடாது என்பது தான் அதிமுக விதியில் இருக்கின்ற அடிப்படை உரிமை.

எனக்கு துணை முதல்-அமைச்சர் பதவியோ அமைச்சர் பதவியோ நான் உரிமைகோரவில்லை எனக்கு தேவையில்லை.

2 முறை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் நான் முதல்-அமைச்சராக்கப்பட்டவன்.

துணை-முதல் அமைச்சர் என்பது அதிகாரமற்ற பதவி. பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க துணை முதல்-அமைச்சராக நான் பதவியை ஏற்றுக்கொண்டேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்