ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வருகிறார் - எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2022-06-29 12:46 GMT

சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் தனது நிலைப்பாட்டை அவ்வப்போது மாற்றி வருவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவுக்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாகவும் ஒற்றைத் தலைமை வேண்டுமென்றும் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை அதிமுக பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்களும் பொதுக்குழு உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டதாக விளக்கமளித்துள்ளார்.

பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று ஜூலை 11-ந்தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடிவெடுக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்