ஓ.பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத்கமிட்டி அமைப்பது குறித்து ஓ.பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-10-25 21:23 GMT

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் பூத்கமிட்டி அமைப்பது குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர்கள் ராஜரத்தினம், பூண்டி கிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, சண்முகபிரபு, ரமேஷ் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கோட்டை பகுதி செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்