ஓ.பன்னீர் செல்வம் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்...! - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியது வழக்கத்துக்கு மாறான புதிய முறை உள்நோக்கத்துடன் ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார் என ஜெயக்குமார் கூறினார்.

Update: 2022-06-21 10:27 GMT

சென்னை,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திட்டமிட்டபடி அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும்.ஒற்றைத் தலைமை என்பது அ.தி.மு.க.வில் தொண்டர்கள் தொடங்கி மூத்த தலைவர்கள் வரை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்நோக்கத்துடன் ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டுவருகிறார் . எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியது வழக்கத்துக்கு மாறான புதிய முறை. தொலைபேசியில் அவர் பேசியிருக்கலாம்.ஓ.பன்னீர் செல்வம் கடிதம் ஊடகங்களில் வெளியானது எப்படி? ஓ.பன்னீர் செல்வம் கடிதம் அனுப்பியதாலேயே எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் அனுப்ப வேண்டியதாகி விட்டது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் தான் தலைமை தாங்கினர்.ஒற்றைத் தலைமை கோரிக்கை என்பது வெளிப்படைத்தன்மை கொண்டது என்பதால் வெளிப்படையாக பேசினேன்.ஒற்றைத்தலைமை என்பது நல்ல விஷயம், அதனை வெளிப்படையாக பேசியதில் எந்த தவறும் கிடையாது.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்துகொண்டு ஓ.பன்னீர் செல்வம் சந்திக்கிறார். உறுப்பினருக்கு ஒரு சட்டம், ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டமா?

ஒட்டுமொத்த தொண்டர்களின் ஒரே விருப்பம் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான். பொதுக்குழு நடக்க வேண்டும் என கிளைக்கழகச் செயலாளர்கள் உட்பட கடிதம் கொடுத்துள்ளனர்.அ.தி.மு.க.வில் 95 சதவிதத்திற்கு மேலே ஒற்றைத் தலைமை வேண்டும் என்றே கேட்கின்றனர்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்