கழுத்தில் நைலான் கயிறு இறுக்கியதில் சிறுவன் பலி

விளாத்திகுளம் அருகேகழுத்தில் நைலான் கயிறு இறுக்கியதில் சிறுவன் பலியானான்.

Update: 2023-01-22 18:45 GMT

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கீழ விளாத்திகுளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேல் மகன் நிரஞ்சன் (வயது 5). இவன் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தான். நிரஞ்சனின் தந்தை கிருஷ்ணவேலுவும், தாயார் செல்வியும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் தாயாரிடம் வளர்ந்து வந்த சிறுவன் நிரஞ்சன் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் உள்ள கதவின் அருகே தொங்கியபடி விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அருகே இருந்த நைலான் கயிறு எதிர்பாராத விதமாக கழுத்தில் இறுக்கி சம்பவ இடத்திலேயே பலியானான்.

சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டில் வேலைக்கு சென்றிருந்த ெசல்வி வீடு திரும்பியபோது, மகன் கயறு இறுக்கி பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்