சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு, சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-30 16:48 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மடியேந்தி போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராமு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிக்காளை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாநில செயலாளர் ஜெசி, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முபாரக்அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மடியேந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். சத்துணவு திட்டத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்