சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-08 20:10 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் லெனின், தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, பாலக்கரையில் இருந்து விருத்தாசலம் ஒன்றிய அலுவலகம் வரை பேரணியாக வந்தனர். முடிவில் வட்ட பொருளாளர் சவுந்தர கொடி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்