ஊட்டச்சத்து மாத திருவிழா

ஊட்டச்சத்து மாத திருவிழா

Update: 2022-09-17 18:45 GMT

சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து மாத திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு சீர்காழி நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமை தாங்கினார். அங்கன்வாடி பணியாளர் சங்க தலைவர் வாசுகி முன்னிலை வகித்தார். அங்கன்வாடி பணியாளர் விஜயலட்சுமி வரவேற்று பேசினார். முன்னதாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு வாகனத்தை நகரசபை தலைவர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு ஊர்வலம் தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு புதிய பஸ் நிலையம் வழியாக மீண்டும் மணிமண்டபத்தை வந்து அடைந்தது. ஊர்வலத்தில் ஊட்டச்சத்து அடங்கிய பதாகைகளை அங்கன்வாடி பணியாளர்கள் கையில் ஏந்தி சென்றனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் , உதவியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக காய்கறி, தானியங்கள், பழங்கள், முட்டை உள்ளிட்டவைகளான கண்காட்சி பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்