குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி

Update: 2022-06-02 17:28 GMT

தியாகதுருகம்:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் தியாகதுருகம் வட்டாரத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி தலைமை தாங்கினார். தியாகதுருகம் ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கொளஞ்சிவேலு வரவேற்றார். தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் கலந்து கொண்டு 20 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சந்திரசேகர், செல்வராஜ், தி.மு.க. நிர்வாகிகள் அண்ணாதுரை, எத்திராசு, அங்கன்வாடி பணியாளர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்