கூடலூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம்

கூடலூரில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2022-09-20 18:45 GMT

கூடலூர்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் போஷன் அபியான் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு ஊர்வலம் கூடலூரில் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி கலந்துக் கொண்டார். ஊர்வலம் ராஜகோபாலபுரம் பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஐந்து முனை சந்திப்பு பகுதியை அடைந்தது. தொடர்ந்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

மேலும் ஊட்டசத்து குறித்து உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இதில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் ஒருங்கிணைப்பாளர் ரகு, திட்ட உதவியாளர், மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்