சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம்

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் நூதன போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-04-16 20:39 GMT

நெல்லையில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் நலச்சங்கத்தினர் வண்ணார்பேட்டை பாலத்தின் கீழ் நேற்று மடியேந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மார்ச் மாத ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தோடு மருத்துவப்படி, வீடு வாடகைப்படி, அகவிலைப்படி அனைத்தும் சேர்த்து ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

சங்க மாநில அமைப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் சந்திரசேகர், பால்ராஜ், நடேசன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்