ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் கிராமம் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகள் ஹெலன்மேரி(வயது 19). டிப்ளமோ நர்சிங் பயின்று வருகிறார். இவர் நேற்று காலை ஜெயங்கொண்டத்திற்கு சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியசாமி தனது மகளை அக்கம் பக்கத்தில் உறவினர்கள் என அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. பின்னர் அவர் இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாயமான ஹெலன்மேரியை போலீசார் தேடி வருகின்றனர்.