விஷம் குடித்த நர்சிங் மாணவி சாவு

முத்துப்பேட்டை அருகே விஷம் குடித்த நர்சிங் மாணவி சாவு

Update: 2023-05-10 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டையை அடுத்த கீழநம்மங்குறிச்சி ஊராட்சி பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் மகள் சத்தியா (வயது 20). இவர் நர்சிங் முடித்துவிட்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சத்தியாவின் சகோதரர்கள் சக்திவேல், சதீஸ்குமார் இருவரும் சத்தியாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கண்டித்துள்ளனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த சத்தியா கடந்த 5-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சத்தியா சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த சத்தியா உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்