தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-26 21:00 GMT

தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கருணாநிதி நூற்றாண்டு உயர்சிறப்பு ஆஸ்பத்திரிக்கு நிரந்தர செவிலியர் பணியிடங்களை ஒப்பளிப்பு செய்வதை கைவிட வேண்டும். அந்த ஆஸ்பத்திரிக்கு தேவையான செலிவியர் பணியிடங்கள் முழுவதையும் நிரந்தர செவிலியர் பணியிடங்களாக தோற்றுவித்து, அதில் எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க தலைவர் உடையாளி தலைமை தாங்கினார். இதில், செவிலியர்கள் பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்