1800-க்கும் மேற்பட்ட துணை மைய காலியிடங்களை நிபந்தனையின்றி உடனடியாக நிரப்ப வேண்டும். 2 ஆண்டுகளுக்கும் மேலாக கூடுதல் பணியாக காலி துணை மைய பணிகளை முழுமைப்படுத்தி கொடுத்தமைக்கு கூடுதல் பொறுப்பு படியை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலயுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சங்க மாவட்ட தலைவர் சாந்தாமணி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கிராம சுகாதார செவிலியர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்க வேண்டும். துணை இயக்குனர் அலுவலகங்களுக்கு மாற்றுப்பணி அமர்த்துவதை ரத்து செய்திட வேண்டும். தடுப்பூசி தின ஊக்கத்தொகை, சில்லறை செலவினம் ஆகியவற்றை செவிலியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்