தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-10-21 16:48 GMT

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக சுகாதார சட்டமைப்பை சீர்குலைக்கும் அரசாணை எண் 288 மற்றும் 392-ஐ திரும்பப்பெற வேண்டும். குடியிருக்க லாயக்கற்ற துணை மைய கட்டிடத்துக்கு பிடித்தம் செய்த வாடகை தொகையை திரும்ப வழங்க வேண்டும். துறையில் பிற ஊழியர்களின் பணியை சுகாதார ஊழியர்களின் மீது திணிக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பிருந்தா தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் சசிகலா முன்னிலை வகித்தார். இதில் செவிலியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுவை கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்