தூக்குப்போட்டு நர்சு தற்கொலை

திருச்சி அருகே நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-19 18:34 GMT

திருச்சி அருகே நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நர்சு

திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூர் ராசி நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகள் ஜெயப்பிரியா (வயது 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஜெயப்பிரியா சமயபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்று 6 மாதங்கள் ஆகிவிட்டதாகவும் தெரிகிறது.

தற்கொலை

ஆனாலும் ஜெயப்பிரியா அந்த வாலிபருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த ஜெயப்பிரியாவின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜெயப்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்