ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நீடாமங்கலம் ஒன்றியத்தில் உள்ள அரசு-அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள எண்ணும் எழுத்தும் வகுப்பறையை கையாளும் 120 ஆசிரியர்களுக்கு மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய பாடங்களுக்கு நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி நாளை(புதன்கிழமை) வரை நடைபெறுகிறது. பயிற்சியை நீடாமங்கலம் வட்டாரக்கல்வி அலுவலர் சம்பத் தொடங்கி வைத்து, பயிற்சியின் அவசியம் குறித்தும், எண்ணும் எழுத்தும் திட்டத்தினால் மாணவர்களின் கற்றல் அடைவுகளில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறித்தும், 2023 - 2024-ம் கல்வியாண்டிற்குரிய எண்ணும் எழுத்தும் ஆசிரியர் கையேட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியின் நோக்கங்கள் குறித்தும் பேசினார். இதில் மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் வசந்தி, நீடாமங்கலம் வட்டாரக்கல்வி அலுவலர் முத்தமிழன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.