எண்ணும் எழுத்தும் பயிற்சி
வலங்கைமானில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது
வலங்கைமான்;
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான பயிற்சி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.இதில் 1 முதல் 3 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியை மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சுகந்தி, வட்டாரக் கல்வி அலுவலா்கள் தாமோதரன், ஜெயலெட்சுமி ஆகியோா் தொடங்கி வைத்தனர். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன் செய்திருந்தாா். 7 ஆசிரியர் பயிற்றுனர்கள், 36 ஆசிரியர்கள் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 212 ஆசிரியா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.